Wednesday, 20 March 2013

Sarabeswara Gayathri Mantra

Sarabeswara Gayathri Mantra

Benefit (s) : By reciting the Sarabeswarar Gayathri mantra, it gives the reciter to overcome all enemies in life and protects one from various types of dangers.

Best Time to Chant : Pradosha kala, Shivarathri thithi, and Mondays

Number of Time to Chant : 11, 108, or 1008 times


Aum Saalu-vesaaya Vidmahe
Pakshi Rajaaya Dhimahee
Thanno Saraba Prachodayath

ஓம் ஷாலுவேஷாய வித்மஹே
பக்ஷி ராஜாய தீமஹீ
தந்நோ சரப ப்ரசோயதாத்!

எவன் ஒருவன் காலை மற்றும் மாலை நேரங்களில் 27 தடவை பக்தியோடு சொல்வானோ, அவனுக்கு எதிரிகளே கிடையாது!

ஸ்ரீ அனுமன் புகழ்


ஸ்ரீ அனுமன் புகழ்


துளசிதாசர் இயற்றிய "ஹனுமான் சாலிஸா"வை தழுவியது.



குருவின் பாத தூசை எடுத்து
மருகும் மனதின் அவலம் துடைத்து
அறம் பொருள் இன்பம் வீட்டை வெல்வேன்
ஸ்ரீ ராமர் புகழை பாட்டில் சொல்வேன்

என் அறிவின் சிறுமை நினைத்து அழுகிறேன்
உன் அழகிய திருவடி அணைத்து தொழுகிறேன்
வலிமை அறிவு ஞானம் தருவாய்
துன்பம் தவறுகள் உடனே களைவாய்

அகிலம் போற்றும் அஞ்சனை மகனே
வானவர் போற்றும் வானரர் தலைவா
மூன்று உலகையும் உணர்வுற செய்வாய்
வெற்றிக் கனியை அனுதினம் கொய்வாய்

காற்றின் கன்றே கடலைக் கடந்தாய்
அன்னை சீதையின் கவலைக் களைந்தாய்
ராம தூதனை வென்றவர் இல்லை
உன் ஆற்றலை அளக்க வானமே எல்லை

தீமையைக் கண்டால் தீயை வைப்பாய்
நன்மை செய்தால் தாயாய் காப்பாய்
உன் உடலின் வலிக்கு இல்லை இணையே
என் மனதின் வலிக்கு நீ தான் துணையே

கடல் போல் விரிந்த பொன்னிற தேகம்
அதன் மேல் அலையென அழகிய கேசம்
வண்ணப் பட்டாடை உன் பொலிவை பேசும்
காதின் குண்டலம் உன் உள்ளொளி வீசும்


உன் கையின் கதாயுதம் இடி போல் இறங்கும்
உன் நாவில் ராம் ராம் கொடி போல் விளங்கும்
முஞ்சை புல்லால் பூணூல் அணிந்தாய்
ஸ்ரீ ராமர் திருவடி அன்புடன் பணிந்தாய்

பிறை சடை அய்யனின் அம்சம் நீயே
குறையில்லா காற்றின் குழந்தை நீயே
கேசரி வளர்த்த கேசரி நீயே
உலகம் வியக்கும் உன் தேஜஸ் தீயே

அனைத்தும் அறிந்த அறிஞன் நீயே
நினைத்து வியக்க குணவான் நீயே
ஸ்ரீ ராமர் திருவாய் ஒரு வார்த்தை சொல்ல
காத்திருக்கிறாய் இவ்வுலகை வெல்ல

ஸ்ரீ ராமரின் நற்குண நினைவில் நிறைவாய்
ஸ்ரீ ராமர் புகழில் உள்ளம் கரைவாய்
ஒரு முறை கோபத்தில் நீ நெஞ்சை பிளக்க
அதில் ராமர் தோன்றினார் உன் பக்தியை விளக்க

அணிமா சக்தியால் உருவை குறைத்தாய்
ஸ்ரீ ராமர் செய்தியை சீதைக்கு உரைத்தாய்
ஆக்ரோஷம் கொண்டு விஸ்வரூபம் தரித்தாய்
அனலை கொண்டு இலங்கை எரித்தாய்

இமயம் சென்று மலையை தூக்கினாய்
களத்தில் லக்ஷ்மணர் மயக்கம் போக்கினாய்
தன் உயிரே கிடைத்ததாய் ராமர் மகிழ்ந்தார்
பரதனுக்கு நீயே இணையென புகழ்ந்தார்

முனிகள் ரிஷிகள் யோகியர் தவசியர்
பிரம்மா முதலாம் தேவர் பலரும்
திரிலோகம் திரியும் நாரத முனியும்
உன் பெருமை அளந்து தோல்வியே கண்டார்

சனத்குமாரர் நால்வர் நாவும்
ஆதிசேஷன் ஆயிரம் வாயும்
சிவனும் யமனும் இன்னும் பலரும்
உன் புகழை பாட இயலாதென்றார்

ராமர் சுக்ரீவர் நண்பர் ஆக்கினாய்
உன் தலைவனை நீ தான் அரசனாக்கினாய்
வீர விபீஷணன் உன் பாதம் பணிந்தான்
உன் சொல்படி நடந்து ராஜ்யம் அடைந்தான்

நீ பால அனுமனாய் பறப்பதை பார்த்தவர்
சிவந்து நிற்கும் அந்திச் சூரியன்
அனுமன் வாயில் ஜிலேபி என்றார்
அவன் திறனுக்கு இதெல்லாம் ஜுஜுபி என்றார்

ராமரைப் பாடி உன் பக்தனாய் ஆனார்
கனவில் கூட கடினம் காணார்
ராம ராஜ்யத்தின் வாயில் காத்தாய்
உத்தமரை மட்டுமே உள்ளே சேர்த்தாய்

மூன்று உலகும் நீ முனிந்தால் மருளும்
உன் எண்ணத்திற்கேற்ப நவகோள் உருளும்
மனதில் பதிந்தால் உந்தன் பாதம்
அருகில் வராது பிசாசு பூதம்

எனை நீ காத்தால் கவலை இல்லை
உன் பாதுகாவலில் நெருங்குமோ தொல்லை?
உடலை வாட்டும் நோயும் அகலும்
மனதை வாட்டும் துன்பம் விலகும்

மனதால் வாக்கால் செயலால் உன்னை
மனனம் செய்வதால் காப்பாய் என்னை
நீ ஆற்றலை பக்தியால் மறைத்திடும் ஞானி
என் நிலையை உயர்த்திட நீயே ஏணி

பக்தவத்சலர் ஸ்ரீ ராமர் பணியை
முடிப்பதில் பறித்தாய் வெற்றிக் கனியை
அல்லும் பகலும் உனை அயராது தொழுதால்
சிற்றின்ப ஆசைகள் சீக்கிரம் நிறைவேறும்
பேரின்பப் பெருநிலை இதயத்தில் குடியேறும்

நல்லோர் ஞானியரை அன்போடு பார்க்கிறாய்
கண்ணின் கருமணியை இமைபோல காக்கிறாய்
ஸ்ரீ ராமர் மனதுக்கு உகந்தவன் நீயே
தீய சக்தியை அழிக்கும் தீயே

அன்னை சீதை உனை பிள்ளையாய் பார்த்தாள்
அக்னி தேவன் உனை சுடாது காத்தாள்
நீ கைக்கால் முளைத்து நடமாடும் பக்தி
உன் திருவடி பிடித்தார்க்கு தருவாய் முக்தி

உன்னை தொழுதால் ஸ்ரீ ராமர் அருள்வார்
தன்னையே தொழுததாய் எண்ணி மகிழ்வார்
உன்னை தொழுதவன் அடைவான் வைகுண்டம்
அவனை நெருங்குமோ காலனின் எமகண்டம்?

உனையே துதித்தார்க்கு நீ இன்ப ஊற்று
உன் பக்தர்க்கு உனை விட்டால் ஏது மாற்று
இனிய வீரனே நீ எல்லாம் வல்லவன்
எளிய பக்தரின் துன்பம் தீர்ப்பவன்

பரந்த இவ்வுலகில் நீ எதுவும் முடிப்பாய்
என் துன்பத்தை துயரத்தை விரட்டி அடிப்பாய்
உலகம் முழுதும் உந்தன் பெருமை
அதை அறியாதது அவரவர் சிறுமை

என் அரசன் அனுமனுக்கு ஜே ஜே சொல்கிறேன்
உன்னை மட்டுமே என் குருவாய் கொள்கிறேன்
இந்தத் துதியை தினமும் படிப்பேன்
கர்ம வினைகளை நொடியில் பொடிப்பேன்

இதை தினமும் படித்தால் சிவனார் குளிர்வார்
யோகியர் விரும்பும் பரிபூரணம் தருவார்
துளசிதாசர் போலவே உன் அன்பை தேடினேன்
என் இதயத்தில் நீ அமர உன் திருவடி நாடினேன்

வாயு புத்திரா அஞ்சனை மைந்தா
ராம பக்தா சூரியன் சிஷ்யா
சீதா ராம லக்ஷ்மணரோடு வருவாய்
அடியேன் இதயத்தில் அன்புடன் குடிபுகுவாய்

சரணம் சரணம் இறைவா சரணம்
சரணம் சரணம் குருவே சரணம்
சரணம் சரணம் அறிவே சரணம்
சரணம் சரணம் அருளே சரணம்

போற்றி போற்றி இறைவா போற்றி
போற்றி போற்றி குருவே போற்றி
போற்றி போற்றி அறிவே போற்றி
போற்றி போற்றி அருளே போற்றி

என் அனுமனுக்கு ஜே ஜே
என் அரசனுக்கு ஜே ஜே
ராம பக்தருக்கு ஜே ஜே
ஸ்ரீ ராமருக்கு ஜே ஜே

Saturday, 16 March 2013

அநுமன் துதி


அநுமன் துதி
**************

ஓம் அசோகவனம் அழித்தவனே போற்றி
ஓம் அடலுடை வீரா போற்றி
ஓம் அபயம் தருபவனே போற்றி
ஓம் அழியா ஆன்மா உடையவனே போற்றி
ஓம் அனந்த சக்தி கொண்டாய் போற்றி
ஓம் அங்கதன் மெச்சிய அமைச்சரே போற்றி
ஓம் அணுவில் புகுந்தவனே போற்றி
ஓம் அஞ்சனை புத்திரா போற்றி
ஓம் அம்மை சோகம் தீர்த்தவனே போற்றி
ஓம் அம்மையின் ஆசி பெற்றவனே போற்றி
ஓம் அருச்சுனன் தேர்க்கொடி அமர்ந்தவனே போற்றி
ஓம் அனுமேயம் கடந்தவனே போற்றி
ஓம் அனுமனே போற்றி
ஓம் அனுமந்தா போற்றி
ஓம் அன்றினர் அழித்தவனே போற்றி
ஓம் ஆசையை வென்றவனே போற்றி
ஓம் ஆதவனைப் பிடித்தவனே போற்றி
ஓம் ஆதவன் மாணாக்கனே போற்றி
ஓம் ஆயகலைகள் அத்தனையும் அறிந்தவனே போற்றி
ஓம் அசுர குலத்து எமனே போற்றி
ஓம் ஆஞ்சனேயா போற்றி
ஓம் ஆயுள் வளர்ப்பவனே போற்றி
ஓம் இராம தூதா போற்றி
ஓம் இராம பக்தா போற்றி
ஓம் இராகுவைப் பிடித்தவனே போற்றி
ஓம் இலங்கை அழித்தவனே போற்றி
ஓம் இலங்கணி பணிந்தவனே போற்றி
ஓம் இலக்குவனுக்கு உயிரூட்டியவனே போற்றி
ஓம் இரஞ்சித முகத்தோனே போற்றி
ஓம் இரத்தின குண்டலம் அணிந்தவனே போற்றி
ஓம் இந்திர சித்தை வென்றவனே போற்றி
ஓம் உயிர்ப்பின் மைந்தா போற்றி
ஓம் ஊழி கடந்தவனே போற்றி
ஓம் எப்பவும் இராமா என்றிடும் தேவா போற்றி
ஓம் ஐம் புலன் அடக்கினவனே போற்றி
ஓம் கங்கையில் நடந்தவனே போற்றி
ஓம் கடல் கடந்தாய் போற்றி
ஓம் கடிகையில் அமர்ந்தவனே போற்றி
ஓம் கணையாழி ஈந்தவா போற்றி
ஓம் கணகண கண்டாமணி நாதனே போற்றி
ஓம் கதாயுதபாணியே போற்றி
ஓம் காமனை வென்றவனே போற்றி
ஓம் காலநேமி அழித்தவனே போற்றி
ஓம் காலத்தை வென்றவனே போற்றி
ஓம் கிரீட குண்டலனே போற்றி
ஓம் கிட்கிந்தை வாழ்ந்தவனே போற்றி
ஓம் கோடை இடிக் குரலோனே போற்றி
ஓம் கோள் துயர் நீக்கும் கோமகனே போற்றி
ஓம் கேதுவை அடித்தவனே போற்றி
ஓம் கேசரி மைந்தா போற்றி
ஓம் சக்தியின் இருப்பிடமே போற்றி
ஓம் சஞ்சிதம் களைபவனே போற்றி
ஓம் சஞ்சீவி மலை கொணர்ந்தவனே போற்றி
ஓம் சத்திய உருவே போற்றி
ஓம் சர்வ ரோகம் தீர்ப்போனே போற்றி
ஓம் சிரஞ்சீவியே போற்றி
ஓம் சீதாராமனை நெஞ்சில் காட்டியவனே போற்றி
ஓம் செங்கமலக் கையுடையவனே போற்றி
ஓம் செந்தூர நெற்றி உடையவனே போற்றி
ஓம் சொல்லின் செல்வா போற்றி
ஓம் சுந்தர காண்ட நாயகனே போற்றி
ஓம் சுடர் ஒளித் திருவே போற்றி

ஓம் சூடாமணி கண்டவனே போற்றி
ஓம் ஞான ஒளியே போற்றி
ஓம் தசமுகப் பிரபுவே போற்றி
ஓம் தண்டைக் கழலோனே போற்றி
ஓம் தத்துவ ஞானியே போற்றி
ஓம் திரிசடை புகழ்ந்தோய் போற்றி
ஓம் திருவடி தாங்குபவனே போற்றி
ஓம் தீ£வினை அழிப்பவனே போற்றி
ஓம் துளசி மாலை அணிந்தவனே போற்றி
ஓம் நட்பின் இலக்கணமே போற்றி
ஓம் நவசக்தி மைந்தா போற்றி
ஓம் நறுமணம் கமழும் மேனியுடையவனே போற்றி
ஓம் நான்கு திருக்கரத்தை உடையவனே போற்றி
ஓம் நிகும்பலை யாகம் அழித்தவனே போற்றி
ஓம் நித்தியனே போற்றி
ஓம் நிரந்தரமானவனே போற்றி
ஓம் பராக்கிரமா போற்றி
ஓம் பாரிசாத மரத்தடி அமர்தவனே போற்றி
ஓம் பாவ விமோசனம் தருபவனே போற்றி
ஓம் பிரமச்சாரியே போற்றி
ஓம் பீமனின் அண்ணனே போற்றி
ஓம் பெரிய பெருமாளே போற்றி
ஓம் மகா தவசியே போற்றி
ஓம் மங்களம் தருவோனே போற்றி
ஓம் மஞ்சுள மாருதியே போற்றி
ஓம் மதுவனம் திரிந்தவனே போற்றி
ஓம் மருத மர வாசனே போற்றி
ஓம் மாதங்க வனப் பிரியனே போற்றி
ஓம் மாயையை நீக்குவபனே போற்றி
ஓம் மேதாவியே போற்றி
ஓம் மைநாகம் கண்டோய் போற்றி
ஓம் யோகத்தின் இலக்கணமே போற்றி

ஓம் வச்சிர உடல் உடையவனே போற்றி
ஓம் வச்சிராயுதம் உடைத்தவனே போற்றி
ஓம் வடிவழகு உடையவனே போற்றி
ஓம் வலிமுகம் கொண்டாய் போற்றி
ஓம் வாக்கு வன்மை தருபவனே போற்றி
ஓம் வாயு குமாரா போற்றி
ஓம் வானரர் தலைவா போற்றி
ஓம் விசுவ உருக் கொண்டவனே போற்றி
ஓம் விண்ணில் பறந்தவா போற்றி
ஓம் வித்தை ஈந்தவா போற்றி
ஓம் வீர சூர பராக்கிரமா போற்றி
ஓம் வெண்ணைப் பிரியனே போற்றி
ஓம் வேகத்தின் எல்லையே போற்றி
ஓம் வைதேகி புகழ்ந்தோய் போற்றி


இன்றைய டிப்ஸ்


இன்றைய காயத்ரி மந்திரம்:

தருணாதித்ய ஸ்ங்காஸூ தப்தகாஞ்சந பூஷணா
தமோபஹாரிணீ தந்த்ரீ தாரினீ தாரரூபிணீ!   (3)

தலாதி புவநாந்தஸ்தா தர்கஸாஸ்த்ர விதாயிநீ!
தந்தரஸாரா தந்த்ரமாதா தந்த்ரமார்க ப்ரதர்ஸிநீ!  (4)

--0--0--0--0--0--

இன்றைய டிப்ஸ்

சனி பஹவானின் மைந்தன் மாந்தி / குளிகன்.

குளிகனுக்கான காலம் குளிகை எனப்படும்!

நன்மையானவை மீண்டும் மீண்டும் நமக்கு நடக்க வேண்டுமென

விரும்புபவர் அதனை இந்த நேரத்தில் செய்யலாம்!

ஞாயிறு - 3.00 to 4.30

திங்கள் - 1.30 to 3.00

செவ்வாய் - 12.00 to 1.30

புதன் - 10.30 to 12.00

வியாழன் - 9.00 to 10.30

வெள்ளி - 7.30 to 9.00

சனி - 6.00 to 7.30

Friday, 8 March 2013

த்ரிபம் ஏவது வேதேப்ய:பாதம் பாதமதூதுஹம் (மநுஸ்மிருதி)



சாஸ்திரப் பிரகாரம் செய்ய வேண்டிய கார்யங்களுக்குள் எல்லாம் முக்கியமான காரியம் காயத்ரீ ஜபம்.
த்ரிபம் ஏவது வேதேப்ய:பாதம் பாதமதூதுஹம் (மநுஸ்மிருதி)
காயத்ரீ மூன்று வேதத்திலிருந்து ஒவ்வொரு பாதமாக எடுத்தது என்று மநுவே சொல்கிறார். வேதத்தின் மற்றதையெல்லாம் விட்டுவிட்ட நாம் இதையும் விட்டால் கதி ஏது?

ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்று வேதங்களையும் இறுக்கிப் பிழிந்து கொடுத்த essence (ஸாரம்) காயத்ரீ மஹாமந்திரம்.
காயத்ரீ என்றால், "எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது"என்பது அர்த்தம்.
காயந்தம் த்ராயதே யஸ்மாத் காயத்ரீ (இ) த்யபிதீயதே !
கானம் பண்ணவதென்றன்றால் இங்கே பாடுவதில்லை; பிரேமயுடனும் பக்தியிடனும் உச்சரிப்பது என்று அர்த்தம். யார் தன்னை பயபக்தியுடனும் பிரேமையுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும். அதனால் அந்தப்பெயர் அதற்கு வந்தது. வேதத்தில் காயத்ரீயைப் பற்றிச் சொல்லும் பொழுது,
காயத்ரீம் சந்தஸாம் மாதா
என்று இருக்கிறது. சந்தஸ் என்பது வேதம். வேத மந்திரங்களுக்கெல்லாம் தாயார் ஸ்தானம் காயத்ரீ என்று இங்கே வேதமே சொல்கிறது. 24 அக்ஷரம் கொண்ட காயத்ரீ மந்திரத்தில் ஒவ்வொன்றும் எட்டெழுத்துக் கொண்ட மூன்று பாதங்கள் இருக்கின்றன. அதனால் அதற்கு 'த்ரிபதா' காயத்ரீ என்றே ஒரு பெயர் இருக்கிறது.
காயத்ரீயில் ஸகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை. காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும்.
மந்திரசக்தி குறையாமல் இருக்க தேஹத்தை சுத்தியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தேஹோ தேவாலய:ப்ரக்தோ ஜீவ:ப்ரோக்தோ ஸநாதன:|
தேஹம் ஒரு தேவாலயம். அந்த ஆலயத்துக்குள் இருக்கிற உயிரான ஜீவன் ஈச்வரஸ்வரூபம். ஆலயத்தில் அசுத்தியோடு போகக்கூடாது. அங்கே அசுத்தமான பதார்த்தங்களை சேர்க்கக் கூடாது. மாம்ஸம், சுருட்டு முதலியவைகளை கொண்டு போனால் அசுத்தம் உண்டாகும். ஆகம சாஸ்திரங்களில் தீட்டோடும் தேஹ அசுத்தத்தோடும் ஆலயத்துக்குப் போகக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அப்படியே மனித தேஹம் ஒரு தேவாலயமானால் அதிலும் அசுத்தமான பதார்த்தங்களைச் சேர்க்கக்கூடாது. குறிப்பாக, மந்திரசக்தி இருக்க வேண்டிய தேஹத்தில் அசுத்தமானவைகளைச் சேர்த்தால் அது கெட்டுப் போய்விடும். வீட்டுக்கும் தேவாலயத்திற்கும் வித்தியாஸம்இருக்கிறது. ஆனாலும் தேவாலயத்தைப் போல அவ்வளவு கடுமையாக அசுத்தம் வராமல் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு மூலையிலாவது வாய் கொப்புளிக்கவும்,ஜல மல விஸர்ஜனத்துக்கும், பஹிஷ்டா (மாதவிடாய்) ஸ்திரீக்கும் இடம் வைக்கிறோம். Flat system -ல் கடைசியில் சொன்னது போய், அநாசார மயமாகி விட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஆலயத்தில் கொஞ்சங்கூட இடமில்லையல்லவா?
ஒரு தேசத்தில் வீடும் வேண்டும், ஆலயமும் வேண்டும். அதே மாதிரி ஜனசமூகத்தில் லோக காரியங்களைச் செய்யும் வீடு மாதிரியான தேகங்கள், ஆத்ம காரியத்தைச் செய்யும் ஆலயம் மாதிரியான தேகங்கள் இரண்டும் வேண்டும். தேஹங்களுக்கு ஆத்மாவை ரக்ஷிப்பவை தேவாலயத்தைப் போல பாதுகாக்கப்பட வேண்டிய பிராம்மண தேஹங்கள். வேத மந்திர சக்தியை ரக்ஷிக்க வேண்டியவைகளாதலால் ஆலயம்போல் அதிக பரிசுத்தமாக அந்த தேகங்கள் இருக்க வேண்டும். அசுத்தியான பதார்த்தங்களை உள்ளே சேர்க்கக் கூடாது. 
மந்திர சக்தியை ரக்ஷித்து அதனால் லோகத்துக்கு நன்மையை உண்டாக்க வேண்டுவது பிராம்மணன் கடமை. அதனால்தான் அவனுக்கு அதிகமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. "மற்றவர்கள் அது பண்ணுகிறார்களே, நாமும் ஏன் பண்ணக்கூடாது?"என்று அசுத்தியைத் தரும் காரியங்களை பிராம்மணன் பண்ணக்கூடாது. அவர்களெல்லாம் சரீரத்தை வைத்துக் கொண்டு ஸந்தோஷமான அநுபவங்களை அடைகிறார்களே என்று இவன் தனக்குத் தகாதவற்றைச் செய்யக்கூடாது. "பிராம்மணனுக்கு தேஹம் ஸந்தோஷத்தை அநுபவிப்பதற்காக ஏற்பட்டதல்ல. 
லோக உபகாரமாக வேதத்தை ரக்ஷிக்க வேண்டிய தேஹம் அது. அது மஹா கஷ்டப்படவே ஏற்பட்டது"என்று (வாஸிஷ்ட ஸ்ம்ருதி'யில்) சொல்லியிருக்கிறது:"ப்ராஹ்மணஸ்ய சரீரம் து நோபபோகாய கல்பதே!இஹ க்லேசாய மஹதே".  லோக க்ஷேமத்திற்காக மந்த்ரங்களை அப்யஸிக்க வேண்டும் என்பதற்காகவேதான் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செய்து கொள்வது. வேத மந்திரங்களை ரக்ஷிப்பதற்காகவே- 
அதன் மூலம் ஸகல ஜீவ ஜந்துக்களையும் ரக்ஷிப்பதற்காகவே - தேஹத்தை வைத்துக் கொள்ள வேண்டும். 'எல்லோரும் ஸெளகரியமான தொழில் பண்ணுகிறார்களே!ஏன் நாம் செய்யக் கூடாது?என்று பிராம்மணன் நினைக்கக் கூடாது. தன்னுடைய கடமையை நன்றாகச் செய்துவிட்டுப் பிறகுதான் ஜீவனோபாயத்தை நினைக்க வேண்டும். முன்பு இவன் பிராம்மண தர்மங்களைச் செய்தாலே போதுமென்று ராஜாவும் ஸமூஹமும் இவனுக்கு மானியம், ஸம்பாவனை செய்து வாழ வசதி தந்தார்கள். 
இப்போது நிலைமை மாறிவிட்டதால், பணத்துக்கும் கொஞ்சம் பிரயத்தனப்பட வேண்டியதுதான். ஆனால் நிரம்பப் பணத்தை ஸம்பாதிக்க வேண்டுமென்று ஆசைப்படக்கூடாது. இதற்காக அநாசார வழிகளில் பிரவேசிக்கக் கூடாது. பிராம்மணர்களுக்கு தரித்திர நிலை வேண்டியதுதான். இன்பங்களைத் தேடாமல் காயக் காயக் கிடந்தால்தான் இவனுக்கு ஞானப் பிரகாசம் உண்டாகும். அதனால் லோகம் வாழும். கண்ட தேசங்களுக்குச் சென்று ஆசார அநுஷ்டானங்களை விட்டுவிட்டு ஸம்பாதிக்கிற ஐச்வர்யம் இவனுக்கு வேண்டாம். அதுபடி ஸம்பாதிக்காவிட்டால் ஒன்றும் முடியாது என்பது இல்லை. 
லோகத்தில் மந்திர சக்தியைக் காப்பாற்றிக் கொண்டு தன்னுடைய தர்மத்தை அநுஷ்டிப்பது முதல் கடமை. ஸம்பாதிப்பது secondary (இரண்டாவது) தான். மந்திர சக்தி என்ற அக்கினியை இவன் காப்பாற்றிக் கொண்டு வந்தால் அது எல்லோருக்கும் க்ஷேமத்தை உண்டாக்கும். லோகத்தில் எவருக்குக் கஷ்டம் வந்தாலும் அதை நிவர்த்திக்கும் சக்தி பிராம்மணனுக்கு மந்திர சக்தியின் மூலம் இருக்க வேண்டும். யாராவது கஷ்ட காலத்தில் வந்து பிரார்த்தித்தால், அவன் ண்ணுவதைத்தான் நானும் பண்ணுகிறேன், உனக்கு இருக்கிற சக்திதான் எனக்கும் இருக்கிறது"என்று ஒரு பிராம்மணன் சொன்னால் அவனுடைய ஜன்மா வீண்.
மந்திர சக்தியாகிய அக்கினி இப்பொழுது பெரும்பாலும் அணைந்திருக்கிறது. பிராம்மண தேஹம் விகாரம் ஆகிவிட்டது. அதில் அசுத்தமான பதார்த்தங்கள் சேர்க்கப் படுகின்றன. ஆனால், ஒரு பொறி மட்டும் அணையாமல் இருக்கிறது. அதை விருத்தி பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் எப்பொழுதாவது பற்றிக்கொள்ளும். அந்த நெருப்புப் பொறிதான் காயத்ரீ. அது பரம்பரையாக வந்திருக்கிறது.
மூன்று தலைமுறையாக காயத்ரீயை விட்டு விட்டவன் பிராம்மணனாக மாட்டான். அப்பேர்ப்பட்டவர்கள் இருக்கிற தெரு அக்ரஹாரம் ஆகாது. அது குடியானவர் தெருதான். ஆனால் இன்னும் மூன்று தலைமுறை ஆகவில்லையாகையால் இன்னும் ப்ராம்மணர்கள் என்று பெயரளவாது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
மூன்று தலைமுறை யக்ஞம் இல்லாவிட்டால் அவன் துர்ப்ப்ராம்மணன்; கெட்டுப்போன ப்ராம்மணன். கெட்டாலும்  'ப்ராம்மணன்' என்ற பேராவது இருக்கிறது! மறுபடியும் பிராம்மணனாவதற்குப் பிராயச்சித்தம் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் காயத்ரீயை மூன்றுதலைமுறையாக விட்டுவிட்டால் பிராம்மணத்வம் அடியோடு போய் விடுகிறது. அவன் மறுபடியும் பிராம்மணனாக மாட்டான். அவன் பிரம்மபந்துதான்;அதாவது, பிராமணர்களை உறவுக்காரர்களாக உடையவன்தான்!அப்படியே க்ஷத்ரியன் காயத்ரீயை விட்டுவிட்டால் க்ஷத்ரிய பந்துவாகிறனான்;வைசியன் வைசிய பந்துவாகிறான்.
ஆகையால் அந்த நெருப்புப் பொறியை ஊதிப் பெரிசு பண்ண வேண்டும். சின்ன நெருப்புப்பொறி எதற்கும் உபயோகப்படாது. ஆனால் உபயோகப்படுமாறு பெரிசாக்கப் படுவதற்கு அதில் ஆதாரம் இருக்கிறது.
ஆகையால் ஞாயிற்றுக்கிழமையாவது பூணூல் உள்ளவர்கள் ஆயிரம் காயத்ரீ பண்ண வேண்டும். கண்ட இடத்தில் கண்ட ஆஹாரத்தை உண்ணலாகாது. இது வரைக்கும் அநாசாரம் செய்ததற்குப் பிராயசித்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். இனியாவது கண்ட ஆஹாரத்தை உண்ணாமல், மந்திரசக்தி இருப்பதற்கு தேஹத்தைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
'ஸஹஸ்ர பரமா தேவீ சத மத்யா தசாவரா' என்றை (தைத்திரீய அரண்யக வாக்குப்) படி ஆயிரம் ஆவிருத்தி ஜபிப்பது உத்தமம்;நூறு ஜபிப்பது மத்யமும்;அதம பக்ஷம் பத்து.
காலை ஸந்தி, மத்தியான வேளை, மாலை ஸந்தி என்ற ஒவ்வொரு காலத்திலும் பத்து காயத்ரீயாவது எத்தனை ஆபத்து காலத்திலும் ஜபம் பண்ணவேண்டும். இந்த மூன்று காலங்களும் சாந்தம் உண்டாகிற காலம். காலையில் பக்ஷி முதலிய பிராணிகளும் மனிதர்களும் எழுந்திருக்கும் காலம். அப்பொழுது மனது ஸாந்தியாக இருக்கும். ஸாயங்காலம் எல்லோரும் வேலையை முடிந்து ஒய்ந்திருக்கும் காலம். அதுவும் சாந்தமான காலம். மத்தியான காலத்தில் ஸ¨ரியன் உச்சியில் இருக்கிறான். அப்பொழுது எல்லோரும் அயர்ந்திருக்கும் காலம். அப்பொழுது எல்லோரும் அயர்ந்திருக்கும் காலம். அப்பொழுதும் மனதுக்கு சாந்தமான காலம். இந்த மூன்று காலங்களிலும் காயத்ரீ, ஸாவித்ரீ, ஸரஸ்தீ என்று மூன்று பிரகாரமாக தியானம் செய்ய வேண்டும். காலையில் பிரம்மா ரூபிணியாகவும், மத்தியான்னம் சிவ ரூபிணியாகவும், ஸாயங்காலம் விஷ்ணு ரூபிணியாகவும் தியானம் செய்யவேண்டும்.
ஹிப்நாடிஸம் என்பதனால் பல காரியங்களைச் செய்கிறார்கள். மோக்ஷத்துக்குப் போக உதவும் ஹிப்நாடிஸம் என்பதனால் பல காரியங்களைச் செய்கிறார்கள். மோக்ஷத்துக்குப் போக உதவும் ஹிப்நாடிஸம் காயத்ரீ மந்திரம்!ஆசையை அடக்கி ஜன்மம் எடுத்ததன் பலனை அடையச் செய்கிற ஹிப்நாடிஸம் காயத்ரீ!  லோக காரியங்களைக் குறைத்துக் கொண்டு இந்தப் பொறியை ஊதுவதை அதிகமாகச் செய்யவேண்டும். இதை ஒரு விரதமாக வைத்துக் கொள்ளவேண்டும். அநாசாரத்தில் போகாமல் தேகத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் இந்த ஒரு பொறியாவது அணையாமலிருக்கும்.
ஸந்தியாவந்தனத்தில் அர்க்கியமும் காயத்ரீயும் முக்கியமானவை. மற்றவைகளெல்லாம் அதற்கு அங்கமானவை. அசக்தர்களாயிருப்பவர்கள் அர்க்கியத்தைக் கொடுத்துவிட்டுப் பத்து காயத்ரீயாவது ஜபிக்க வேண்டும். 'அந்த இரண்டு தானே முக்கியம்?அவைகளை மட்டும் செய்துவிடலாம்' என்றால் வரவர அவைகளுக்கும் லோபம் வந்துவிடும். ஆபத்திலும் அசக்தியிலும் பத்து காயத்ரீ போதும் என்பதால் எப்போதும் இப்படிப் பத்தே பண்ணினால், அப்படிப் பண்ணுகிறவர்களுக்கு எப்போதும் ஆபத்தும் அசக்தியுமாகத் தான் இருக்கும் என்று ஒரு பண்டிதர் வேடிக்கையாகச் சொன்னார். ஆகையால் அங்கபுஷ்களத்தோடு எதுவும் குறைவின்றி செய்து வந்தால்தான் முக்கியமானது நன்றாக நிற்கும். ஆபத்துக் காலத்திலுங்கூட அவைகளைச் செய்து வரவேண்டும். காலம் தப்பாமல் செய்யவேண்டும். பாரத யுத்தத்தின் போது ஜலம், அகப்படாதபோதுகூட தூளியை (புழுதியை) வைத்துக்கொண்டு காலம் தவறாமல் ஸேனாவீரர்கள் அர்க்கியம் கொடுத்தார்களென்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஒருவனுக்கு ரொம்பவும் ஜ்வரம் வந்தால், கூட இருக்கிறவர்கள் அவனுக்காக ஸந்தியா வந்தனம் பண்ணித் தீர்த்தத்தை ஜ்வரம் வந்தவன் வாயில் விடவேண்டும். இப்பொழுது நமக்கு நித்தியப்படி ஜ்வரம் வந்தது போலத்தான் இருக்கிறது !
ஜ்வரம் வந்தால் அதற்கு மருந்து அவசியம்; அதுபோல ஆத்மாவுக்கு வந்திருக்கிற பந்தம் என்ற ஜ்வரம் போக காயத்ரீ மருந்து அவசியமானது. அதை எந்த காலத்திலும் விடக் கூடாது. மருந்தைவிட இதுதான் முக்கியமானது. ஒரு நாளாவது ஸந்தியாவந்தனத்தை விட்டு விட்டோமென்று இருக்கக் கூடாது.
காயத்ரீ ஜபம் பண்ணுவது எல்லாராலும் ஆகிற காரியந்தான். இதிலே ஜலத்தைத் தவிர வேறு திரவியம் வேண்டாம். சரீர பிரயாசையும் இல்லை. லகுவாகப் பரம சிரேயஸைத் தரும் ஸாதனம். ஆயுள் இருக்கிறவரைக்கும்
ஸந்தியாவந்தனத்துக்கு லோபம் வராமல் பண்ணவேண்டும்.
காயத்ரீயை மாத்ரு ரூபமாக (தாய்வடிவமாக) உபாஸிக்க வேண்டும்.
பகவான் எல்லா ரூபமாக இருந்தாலும் மாதா ரூபமாக வந்தால் ரொம்பவும் ஹிதமாக இருக்கிறது. காயத்ரீயை அப்படிப்பட்ட மாதாவென்று வேதம் சொல்லுகிறது.
புருஷனுக்குத்தான் காயத்ரீ இருக்கிறது. ஸ்திரீக்கு எந்த காயத்ரீ இருக்கிறதென்றால் புருஷன் காயத்ரீயை அநுஷ்டித்தாலே ஸ்திரீக்கு க்ஷேமம் உண்டாகும். இதேபால் காயத்ரீ ஜபத்துக்கு அதிகாரம் பெற்ற மூன்று வர்ணத்தாரும் அதை விடாமல் செய்வதாலேயே காயத்ரீயில் உரிமையில்லாத மற்ற ஜாதிகளுக்கும் க்ஷேமமுண்டாகும். தான் ஒன்றைச் செய்யாமலிருப்பதால் தனக்கு மட்டுமே நஷ்டம் என்றால் விட்டுவிடலாம்.
அதனால் பிறத்தியானுக்கு நஷ்டம் என்றால் அப்படி விட்டுவிட முடியாது. காயத்ரீக்கு அதிகாரமில்லாத சூத்ரர்களுக்கும் trustee (தர்மகர்த்தா) மாதிரி இந்த மந்திர சக்தியைப் பெற்றுத்தர வேண்டியவர்கள் இந்தக் கடமையைப் பண்ணாவிட்டால் அது பரிஹாரமே இல்லாத தோஷமாகும்.
பலவித மந்திரங்கள் இருக்கின்றன. அவைகளை ஜபம் பண்ணுவதற்கு முன்பு இன்ன இன்ன பலனை உத்தேசித்து பண்ணுகிறேன் என்று சொல்லுகிறோம். காயத்ரீ மந்திரத்தினுடைய பலன் சித்த சுத்திதான்; மன மாசு அகலுவது தான். மற்ற மந்திரங்களால் உண்டாகிற பலன்களெல்லாம் கடைசியில் சித்த சுத்தி உண்டாக்கத்தான் இருக்கின்றன. அதுவே காயத்ரிக்கு நேரான பலன்; ஒரே பலன்.
இந்தக் காலத்தில் காலையிலும் ஸாயங்காலத்திலும் எல்லாரும் காலந்தவறாமல் ஸந்தியாவந்தனம் செய்யலாம். சீக்கிரம் ஆபீஸுக்குப் போகவேண்டியவர்கள் மத்யான்ன வேளையில் வீட்டிலிருக்க முடியாததால், பிராஃதக் காலம் ஆனபின், அதாவது ஸ¨ர்ய உதயத்திலிருந்து ஆறு நாழிகை (2மணி 24 நிமுஷம்) கழித்து வரும் ஸாங்க்ய காலத்தில், அதாவது 8.30 மணி சுமாருக்கு மாத்தியான்ஹிக அர்க்கியத்தை கொடுத்து ஜபிக்க வேண்டும்.
அதாவது நம்மால் அடியோடு முடியாமற் போனாலன்றி திரிகால ஸந்தியோபாஸனை இல்லாமல் இருக்கவே கூடாது.அடியோடு முடியாமல் ஜ்வரம் வந்தால் மற்றவர்களிடம் "கஞ்சி கொடு, தீர்த்தம்கொடு" என்று சொல்லுவதைப் போல், "எனக்காக ஸந்தியாவந்தனம் பண்ணு" என்று சொல்ல வேண்டும்.
கர்மாநுஷ்டானங்களைச் செய்ய வேண்டியது நமது கடமை.அது மட்டுமில்லாமல் கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் மூன்றும் சேர்ந்ததாகவும் ஸந்தியாவந்தனம் இருக்கிறது. 
 மந்திர ராஜாவான காயத்ரீயிலும், 'என் புத்தியை நல்ல நெறியில் தூண்டு'என்று இல்லாமல் 'எங்கள் புத்தியை'என்பதாக இத்தனை ஜீவர்களையும் உத்தேசித்துத்தான் பிரார்த்திக்கப்படுகிறது. ('எங்கள்'என்று பன்மையில் சொல்லியிருப்பதால் ஒரு பிராம்மணன் பண்ணினாலே நம்மையும் சேர்ந்துவிடும் என்று பிராம்மணர்கள் குதர்க்கம் பண்ணிக் கொண்டு காயத்ரீயை விட்டுவிடக் கூடாது. பிற ஜாதியார், வெளி தேசத்துக்காரர்கள், இன்னம் பசு, பட்சி, பூச்சி, பொட்டு என்ன இருக்குமோ அத்தனையையும் உத்தேசித்து பிரம்ம-க்ஷத்ரிய-வைசியர்கள் இப்படி 'எங்கள்'என்று பிரார்த்திக்க வேண்டும் என்பதே சரியான அர்த்தம்)
அபிவாதனத்தில் எந்த மஹரிஷியுனுடைய ஸந்ததியில் பிறந்திருக்கிறோம் என்று சொல்கிறோமோ அந்த மஹரிஷி முதல் காயத்ரீ ஜபிக்கப்பட்டு வருகிறது.தொடர்ச்சியாக வந்த இந்த தாரையை நாம் அறுத்து விடக்கூடாது.  
மந்திர சக்தியானது அணையாமல் விருத்தியாகக் கிருபை செய்ய வேண்டுமென்று பகவானை எல்லாரும் பிரார்திப்போமாக!

Thursday, 7 March 2013

Rudra and meaning


Rudra and meaning

Courtesy: http://www.advaita-vedanta.org/series/shri_rudram/verses_from_the_shri_rudram-1.htm

Verses from the Shri Rudram - anuvAka 1


Table of Contents

  1. OM namo bhagavate rudrAya
  2. Shri Rudram 1.1
  3. Shri Rudram 1.2
  4. Shri Rudram 1.4
  5. Shri Rudram 1.5
  6. Shri Rudram 1.6
  7. Shri Rudram 1.7
  8. Shri Rudram 1.8
  9. Shri Rudram 1.9
  10. Shri Rudram 1.10
  11. Shri Rudram 1.11
  12. Shri Rudram 1.12
  13. Shri Rudram 1.13
  14. Shri Rudram 1.14
  15. Shri Rudram 1.15

namo bhagavate rudrAya

|| AUM namo bhagavate rudrAya ||

Once again, it is the holy month of shrAvaNa, sacred for the worship of Shiva. The most important part of Shiva worship is undoubtedly the chanting of the shrI rudram with devotion. Regarding the shrI rudram, it is said:

vR^ixasya mUlakena shakhAH puShyanti vai yathA |
shive rudrajapAtprIte prItA evAsya devatAH |
ato rudrajapAdeva bhuktimuktiprasiddhyataH ||

Even as by (watering) the roots of a tree, all its branches are nourished, so by pleasing Shiva with the chant of the Rudram , all the gods are pleased. Therefore, the attainment of bhukti - enjoyment (not against dharma)- and mukti - liberation- is only through chanting the Rudram with devotion.

The shrI rudram is also called the Rudropanishad or the shatarudrIyam.h. The name Rudropanishad indicates that even though the Rudram is technically part of the karma kANDa or the ritual portion of the Vedas, it is held to be on par with the upanishads of the jnAna kANDa. The name shatarudrIyam is applied to indicate that this shrI rudram appears in the texts of the one hundred and one shAkhA's of the Yajur Veda. The chanting of the Rudram is followed by that of the Chamakam, so called because of the frequent occurrence of the expression "cha me."

This wonderful Rudram-Chamakam is to be learned from a Guru who himself has been trained in the Vedic tradition.

There are two versions of the Yajurvedic Rudram, one from the Shukla Yajurveda and the other from the Krishna Yajur veda. The Rg Veda has its own and shorter version of the Rudram.

The importance of this hymn has been attested to by several commentaries, such as the ones by sAyaNa, bhaTTa bhAskara, abhinava shankara, and Vishnu sUrI.

No commentary by Adi Shankara on the Rudram is known. But there are verses from the shrI rudram in the shvetAshvatara upanishad and Shankara has been attributed the authorship of a commentary on the upanishad.

So I would like to present the explanation of such verses from the Rudram that are also present in the shvetAshvatara upanishad along with the commentary attributed to Shankara.

We begin with the shvetAshvatara 3.5:

yA te rudra shivA tanUraghorApApakAshinI |
tayA nastanuvA shantamayA girishantAbhichAkashIhi ||
( shrI rudram: anuvAka 1 , rik 3; shvetAshvatara Up.: 3.5 )

yA - that
te - Your
rudra - O Rudra
shivA - auspicious
tanUH - form
aghorA - not terrifying
apApakAshinI - that which destroys sins by mere remembrance
tayA - by that
naH - us
tanuvA - by the form
shantamayA - by the most joyous
girishanta - O Dweller of the (KailAsa) mountain who confer joy
abhichAkashIhi - look (at us so that we may be united with the
highest good)

O Rudra! O Girishanta (who dwell on the Kailaasa mountain and confer happiness)! By that form of Yours which is not terrifying, which destroys sin by its mere remembrance, and which is all blissful, please behold us and unite us with the highest good!

shA.nkarabhAShyam.h (Commentary of Shankara)

yA te rudreti | he rudra tava yA shivA tanUraghorA | uktaM cha
tasyaite tanuvau ghorA .anyA shivA .anyeti | athavA shivA .avidyA-
tatkAryavinirmuktA sachchidAnandAdvayabrahmarUpA na tu ghorA
shashibiMbamivA .ahlAdinI | apApakAshinI smR^itimAtrAghanAshinI
puNyAbhivyaktakarI | tayA .atmanA no .asmAn.h shantamayA sukhatamayA
purNAnandarUpayA he girishanta girau sthitvA shaM sukhaM tanotIti |
abhichAkashIhi nirIkshasva shreyasA niyojasvetyarthaH ||

Translation of Shankara's commentary:

O Rudra! (By that) form of Yours which is aghorA, ie. not that which is terrifying. It is said (in the BrAhmaNa) "(Rudra is verily this sacrificial fire, agni.) That Rudra has two forms; one is terrifying and the other is shivA, auspicious (or gentle)." Or, the word shivA means that which is free from ignorance (avidyA) and ist effects, which is of the nature of the nondual Brahman that is Existence, Consciousness, and Bliss, which is not terrifying but which causes joy like the form of the moon. apApakAshinI means that which destroys sins by merely being remembered and which reveals merit (puNya). Through that form which is most delightful and of the nature of infinite bliss, O Girishanta, who reside on the (KailAsa) mountain and confer happiness, behold us (look at us) so that (by this glance) we may be united with the highest good (Brahman).

Note:

The brAhmaNa portion identifies Rudra with the sacrificial fire, agni and speaks of two forms of Rudra - one terrifying, the other benign. It is this benign aspect that is associated with the eradication of ignorance and the bestowal of knowledge. It may be noted that the Shri Dakshinamurti form, that grants the Supreme knowledge of Brahman, is the gentle form.

|| AUM namo bhagavate rudrAya ||