Tuesday 30 April 2013

ஸ்ரீவீரபத்திரருக்கும் சண்டிக்கும் பிறந்த குழந்தை கருப்பசாமி

மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி. அவரின் தோற்றம் பற்றிக் கூறுவது இதுவரை கேள்விப்பட்டிராத தகவலாக இருக்கக்கூடும்!

வால்மீகி, தர்பையைக் கிள்ளிப்போட்டு அதற்கு உயிர் கொடுக்க, அதுவே கருப்பண்ண சாமியானது என்பது, ராமாயணத் தகவல், தர்ப்பையில் பிறந்த கருப்பசாமி குறித்த பாடல் வரி, இதற்குச் சான்று பகரும். ஸ்ரீவீரபத்திரருக்கும் சண்டிக்கும் பிறந்த குழந்தை கருப்பசாமி என்றும் சொல்வார்கள். கருப்பன், கருப்பசாமி எனும் பெயர் கொண்ட மனிதர்களின் தலை வெட்டப்பட்ட புதைக்கப்பட்ட இடத்தில். கருப்பசாமி கோயில் ஏற்பட்டது என்றொரு ஆய்வுத் தகவலும் உண்டு. நின்ற கோலம், அமர்ந்த கோலம், குதிரையின் மீதேறி புறப்படும் கோலம்.... இப்படி பல்வேறு நிலைகளில் பல கோயில்களில் காட்சி தருகிறார் கருப்பசாமி. கம்பீர உருவம் தலைப்பாகை, இடையில் கச்சை, மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை மற்றும் கையில் அரிவாளுடன் கோயில் கொண்டிருப்பார். பெரும்பாலும் கையில் சுக்குமாந்தடியுடன் அவர் அருள்வதை தரிசிக்கலாம். கருப்பசாமியின் மனைவி கருப்பழகி(கருப்பாயி); மகன்- கண்டன்;
அண்ணன்-முத்தண்ண கருப்பசாமி; தம்பி- இளைய கருப்பு; தங்கை- ராக்காயி.

பதினெட்டாம்படி கருப்பர்: சபரிமலை ஐயனுக்குத் துணையாகத் திகழ்கிறார் கருப்பசாமி என்ற தகவல் புõரணங்களில் உண்டு. சுவாமி ஐயப்பன், மகிஷியை வதம் செய்யப் புறப்பட்ட போது சிவபெருமான் தனது அம்சமாகிய கருப்பசாமியை அழைத்து ஐயப்பன் சிறு வயதினன். அவனது படைக்கு நீ சேனாதிபதியாக இருந்து, அவன் வெற்றிபெற உதவி செய் எனக் கட்டளை இட்டாராம். அவ்வாறே ஐயன் ஐயப்பனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கருப்பசாமி, சபரிமலையில் 18 ஆம் படியின் அருகே வலப்புறத்தில், பதினெட்டாம்படி கருப்பராக சன்னதி கொண்டிருக்கிறார், முந்திரி நைவேத்தியமும் கற்பூர வழிபாடும் இவருக்கு விசேஷம் ஐயனைத் தரிசிக்கச் செல்பவர்கள் கன்னிமூல கணபதியை வழிபட்டு, வாவர் மற்றும் கருப்பசாமியிடம் அனுமதி பெற்றுவிட்டே, 18 ஆம் படிகளில் ஏறுவார்கள். சரி சாஸ்தாவின் சித்தத்தை ஆணையை நிறைவேற்றும் இவரை சித்தங்காத்தான், பீடாபஹன் என்றெல்லாம் போற்றுவர்.

காவல் தெய்வம் கருப்பண்ண சாமி!

கண்கண்ட தெய்வமாம் கருப்பர் பூஜைக்குச் சுத்தமான நபர்களையே அனுமதிக்க வேண்டும். பூஜையில் அமர்ந்ததும் திருவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பிறகு சங்கல்பம்; நாள் நட்சத்திரம், திதி, யோகம், பெயர், கோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி வணங்குவதுடன், எந்தக் காரியத்துக்காக பூஜை செய்கிறோமோ, அதைச் சிந்தித்துப் பூஜையைத் தொடங்க வேண்டும், முன்னதாக சற்குருவை நமஸ்கரிப்பது அவசியம். கருப்பசாமி தெய்வத்தை புஷ்பங்களால் அர்ச்சிக்கலாம், ஓம் நமோ பகவதே ஸ்ரீஏகமுக கருப்பசாமியே நமஹ எனக் கூறி வழிபடலாம் நிறைவாக நைவேத்திய சமர்ப்பணம்.

இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும் ஸ்ரீமந் நாராயணனும் சிவபெருமானும் பரம்பொருள். சுத்த தெய்வம். சம்ஹார ஆகாரங்கள் வைத்து பூஜிக்கவே கூடாது. மது-மாமிசம் அனைத்தும் காமியார்த்தத்தில் உள்ளவை. துன்பம் கொடுப்பவை. உதாரணமாக ஓர் ஆட்டையோ, மாட்டையோ, கோழியையோ வெட்டினால் அந்த உடலிலிருந்து உயிர் பிரிகிறது. எந்த அளவுக்கு துன்பப்பட்டு அந்த ஜீவன் பிரிகிறதோ, அதைப் போன்று இரண்டு அல்லது மூன்று மடங்கு துன்பம் கொலை செய்தவனுக்கு வந்து சேரும். இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. கருப்பணசாமிக்கு உகந்த படையல் பொருட்கள்-சர்க்கரைப் பொங்கல், அவல், பொரிகடலை, மாம்பழம், வாழை, பலா, கொய்யாப் பழம் மற்றும் இளநீர் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம். கீழ்க்கண்ட தியான ஸ்லோகத்தைக் கூறி கருப்பசாமியை மனதார தரிசிக்கலாம்.

தியான ஸ்லோகம்

த்விபுஜம் பீன க்ருஷ்ணாங்கம் பப்ருச்மச்ரு சிரோருஹம்
கதாம் கட்கம்ச பிப்ராணம் மஹாகாலம் வயம் நும:

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் மற்றும் இந்த நாள் இனிய நாளாக உங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் மிக சிறப்பாய் அமைய எல்லாம் வல்ல இறைவனை இத்தருணத்தில் வேண்டுகிறேன் - சாம்

Tuesday 23 April 2013

நடராஜர் பத்து

மண்ணாதி பூதமொடுவிண்ணாதி அண்டம் நீ மறை நான்கின் அடிமுடியும் நீ மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ மண்டல மிரண்டேழும் நீ. பெண்ணம் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ பிறவும் நீ ஒருவன் நீயே பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ பெற்ற தாய் தந்தை நீயே. பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ போதிக்கவந்த குரு நீ புகழொணாக் கிரகங்க ளொன்பதும் நீ யிந்தப் புவனங்கள் பெற்றவனும் நீ எண்ணரிய ஜீவகோ டிகளீன்ற அப்பனே என் குறைக ளார்க் குரைப்பேன். ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே மானாட மழுவாட மதியாடப் புனலாட மங்கை சிவகாமியாட மாலாட நூலாட மறையாடத் திரையாட மறைதந்த பிரம்மனாட கோனாட வானுலகு கூட்டமெல் லாமாட குஞ்சர முகத்தனாடக் குண்டல மிரண்டாடத் தண்டைபுலி யுடையாடக் குழந்தை முருகேசனாட ஞானசம் பந்தரொடு யிந்திரர்பதி னெட்டு முனியாட பாலகருமாட நரைதும்பை யறுகாட நந்தி வாகனமாட நாட்டிப் பெண்களாட வினையோட உனைப்பாட யெனைநாடி யிதுவேளை விருதோடு ஆடிவருவாய் ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே கடலென்ற புவிமீதில் அலையென்ற வுருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே கண்டுண்டு நித்த நித்தம் உடலென்ற கும்பிக்கு உணவென்ற யிரைதேடி ஓயாம லிரவு பகலும் உண்டுண் டுறங்குவதைக் கண்டதே யல்லாது ஒருபய னடைந்தி லேனே தடமென்ற மிடிகரையில் பந்தபா சங்களெனும் தாபரம் பின்னலிட்டுத் தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை யிவ் வண்ணமாய் இடையென்று கடைநின்று யேனென்று கேளா திருப்பதுன் னழகாகுமோ ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே பம்புசூ னியமல்ல வைப்பல்ல மாரணந் தம்பனம் வசியமல்ல பாதாள வஞ்சனம் பரகாய ப்ரவேச மதுவல்ல சாலமல்ல அம்புகுண் டுகள் விலக மொழியுமந் திரமல்ல ஆகாய குளிகையல்ல அன்போடு செய்கின்ற வாதமோடி களல்ல அரியமோ கனமுமல்ல கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி கொங்கணர் புலிப்பாணியும் கோரக்கர் வள்ளுவர் போமுனி யிவரெலாங் கூறிடும் வைத்யமல்ல என்மனதுன் னடிவிட்டு நீங்காது நிலைநிற்க யேதுளவு புகல வருவாய் ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே நொந்துவந் தேனென்று ஆயிரஞ் சொல்லியும் செவியென்ன மந்தமுண்டோ நுட்பநெறி யறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ சந்ததமுந் தஞ்சமென் றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ. தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளை யில்லையோ தந்தை நீ மலடுதானோ விந்தையும் ஜாலமும் உன்னிட மிருக்குதே வினையொன்று மறிகிலேனே வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே வேடிக்கை யிது வல்லவோ இந்தவுல கீரேழு மேனளித்தாய் சொல்லு யினியுன்னை விடுவதில்லை ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும் வாஞ்சையில் லாத போதிலும் வாலாய மாய்க்கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த போதும் மொழியெதுகை மோனை யிலாமலே பாடினும் மூர்க்கனே முகடாகினும், மோசமே செய்யினும் தேசமே கவரினும் முழு காமி யேயாகினும் பழியெனக் கல்லவே தாய் தந்தைக் கல்லவோ பார்த்தவர்கள் ஏசார்களோ பாரறிய மனைவிக்குப் பாதியுட லீந்தநீ பாலகனைக் காக்கொணாதோ? எழில் பெரிய அண்டங்க ளடுக்கா யமைத்த நீ யென் குறைகள் தீர்த்தல் பெரிதோ ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே அன்னைதந் தைகளெனை யீன்றதற் கழுவனோ அறிவிலா ததற் கழுவனோ அல்லாமல் நான்முகம் தன்னையே நோவனோ ஆசைமூன் றுக்கழுவனோ முன்பிறப் பென்னவினை செய்தனென் றழுவனோ மூடவறிவுக் கழுவனோ முன்னிலென் வினைவந்து மூளுமென் றழுவனோ முந்திவருமென் றுணர்வனோ தன்னை நொந் தழுவனோ உன்னை நொந் தழுவனோ தவமென்ன வென்றழுவனோ தையலர்க் கழுவனோ மெய்வளர்க் கழுவனோ தரித்திர திசைக் கழுவனோ இன்னயென் னப்பிறவி வருமோ வென்றழுவனோ யெல்லா முரைக்க வருவாய் ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே காயா முன் மரமீது பூ பிஞ் சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ கடனென்று பொருள்பறித் தேவயி றெரித்தனோ கிளை வழியில் முள்ளிட்டனோ தாயா ருடன் பிறவிக் கென்னவினை செய்தனோ தந்த பொரு ளிலை யென்றனோ தானென்று கெர்வித்துக் கொலைகளவு செய்தனோ தவசிகளை யேசினேனோ வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரைப் பழித்திட்டேனோ வடவைபோல் பிறரைச் சேர்க்கா தடித்தனோ வந்தபின் என் செய்தனோ ஈயாத லோபி யென்றே பெயரெடுத்தனோ யெல்லாம் பொறுத் தருளுவாய் ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே தாயாரிருந்தென்ன தந்தையு மிருந்தென்ன தன்பிறவி யுறவுகோடி தனமலை குவித்தென்ன கனபெய ரெடுத்தென்ன தரணியை யாண்டுமென்ன சேயர் களிருந்தென்ன குருவா யிருந்தென்ன சீடர் களிருந்து மென்ன சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன நதிக ளெல்லாம் ஓயாது மூழ்கிலும் என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ யிதுவெல்லாம் சந்தையுற வென்றுதான் உன்னிரு பதம் பிடித்தேன். யார் மீது உன்மன மிருந்தாலு முன்கடைக் கண்பார்வை யது போதுமே ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே இன்னமுஞ் சொல்லவோ உன் மனங் கல்லோ இரும்போ பெரும் பாறையோ இருசெவியு மந்தமோ கேளாது அந்தமோ இதுவுனக் கழகுதானோ என்னென்ன மோகமோ இதுவென்ன கோபமோ யிதுவுமுன் செய்கைதானோ இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவேனோ உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ உனை யடுத்துங் கெடுவனோ ஓகோவிது உன்குற்ற மென்குற்ற மொன்று மிலை யுற்றுப்பார் பெற்றவையா ! என் குற்றமாயினும் உன் குற்றமாயினும் இனியரு ளளிக்க வருவாய் ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே சனிராகு கேதுபுதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரிய னிவரை சற்றெனக் குள்ளாக்கி ராசி பன்னிரண்டையும் சமமாய் நிறுத்தி யுடனே பனியொத்த நட்சத் திரங்களிரு பத்தேழும் பக்குவப் படுத்திப் பின்னால் பகர்கின்ற கரணங்கள் பதினொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி யென்முன் கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற கசடர்களையும் கசக்கி கர்த்தனின் தொண்டராம் தொண்டர்க்குத் தொண்டரின் தொண்டர்கள் தொழும்ப னாக்கி இனியவள மருவு சிறு மணவைமுனி சாமியெனை யாள்வதினி யுன்கடன் காண் ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே

ஓம் ஸ்ரீ அக்னி வீரபத்ரர் மாலா முத்ர நாமாவளி

ஸ்ரீ அக்னி வீரபத்ரர் ஓம் ஸ்ரீ அக்னி வீரபத்ரர் மாலா முத்ர நாமாவளி ஸ்ரீ விஸ்வாமித்ர மகரிஷி ,ஸ்ரீ ஆங்கிரசர்,ஸ்ரீ சட்டைமுனி ,ஸ்ரீ புலிப்பாணி போன்ற மாமுனிகள் ஸ்ரீ வீரபத்திரருக்குப் பக்திப்பெருக்கால் ஓம் ஸ்ரீ அக்னி வீரபத்ரர் மாலா முத்ர நாமாவளியால் போற்றி வழிபட ஸ்ரீ வீரபத்திரசாமியே நேரில் ப்பிரசன்னமாகி அவர்களை ஆசிர்வதித்து பல்வேறு சித்திகளை அளித்திட்டார்.அவர்கள் அர்ச்சித்த மலர்களே இங்கு நாமாவளியாக கலியுகத்திற்கு அளித்திடுகிறார் திருக்கைலாயப் பொதிய முனிப்பரம்பரை 1001 வது குரு மஹா சந்நிதானம் சக்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீ -ல-ஸ்ரீ வேங்கடராம சுவாமிகள். பல்வேறு பிரச்சினைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும் தீவினை சக்திகள் பல்வேறு ரூபங்களில் நம்மைத் தாக்கும்போது நிலைகுலையாமல் இருக்கவும் குடும்பத்தினர் அனைவரும் தினமும் பாராயணம் செய்து பலன் பெறுவீர் 1.ஓம் க்லீம் ஓம் ஆதி அக்னி கண நாதாய நம: 2.ஓம் க்லீம் ஓம் ஆதி மூல அக்னீஸ்வர வீரபத்ராய நம: 3.ஓம் க்லீம் ஓம் ஆதி பகவத் அக்னிகார்ய வீரபத்ர புத்ராய நம: 4.ஓம் க்லீம் ஓம் ஆதி தந்த்ர தாந்த்ரீக மஹா வீரபத்ராய நம: 5.ஓம் க்லீம் ஓம் ஆதி குஹசேவித வீரபத்ராய நம: 6.ஓம் க்லீம் ஓம் ஆதி நாராயண அனுக்ரஹ வீரபத்ராய நம: 7.ஓம் க்லீம் ஓம் ஆதி சாஸ்தா சேவித வீரபத்ராய நம; 8.ஓம் க்லீம் ஓம் ஆதி பைரவாநுக்கிரஹ வீரபத்ராய நம: 9.ஒம் க்லீம் ஒம் ஆதி காலேஸ்வர சுகதாயை நாம: 10.ஓம் க்லீம் ஓம் ஆதி கயிலாஸபதி சகாய வீரபத்ராய நம: 11.ஓம் க்லீம் ஓம் ஆதி கும்பேஸ்வர பூரணதாயை நம: 12.ஓம் க்லீம் ஓம் ஆதி முனிபுங்கவ இரட்சகாய நம: 13.ஓம் க்லீம் ஓம் ஆதி சங்கட நிவாரணாய நம: 14.ஓம் க்லீம் ஓம் ஆதி ஐக்கிய ப்ரம்ம தேஜஸாய நம: 15.ஓம் க்லீம் ஓம் ஆதி கௌஸ்தூப மணிமாலாய நம: 16.ஓம் க்லீம் ஓம் அதீதாய நம: 17.ஓம் க்லீம் ஓம் காரண வஸ்துவே நம: 18.ஓம் க்லீம் ஓம் க்ரியா சக்தி பூரணவே நம: 19.ஓம் க்லீம் ஓம் இச்சாசக்திதராய நம: 20.ஓம் க்லீம் ஓம் ஆதி ஆத்மனே நம: 21.ஓம் க்லீம் ஓம் மஹா விஸ்வரூபவே நம: 22.ஓம் க்லீம் ஓம் சதாசிவாம்ஸ மூர்த்தயே நம: 23.ஓம் க்லீம் ஓம் ஹம்ச சோஹமூர்த்தயே நம: 24.ஓம் க்லீம் ஓம் தட்சிணகாளி நேத்ர தீட்சண்யை நம: 25.ஓம் க்லீம் ஓம் ஔஷத கலஸ பாக்யாயை நம: 26.ஓம் க்லீம் ஓம் ரோக நிவாரண மருந்தீஸாய நம: 27.ஓம் க்லீம் ஓம் அஷ்ட பைரவ ப்ராணாதீஸாய நம: 28.ஓம் க்லீம் ஓம் அஷ்ட காளி சஹாதீஸாயா நம: 29.ஓம் க்லீம் ஓம் அஷ்ட திக் பால சேவிதாய நம: 30.ஓம் க்லீம் ஓம் அஷ்ட புஜ நமஸ்கராயை நம: 31.ஓம் க்லீம் ஓம் அஷ்ட ஐஸ்வர்யாயை நம: 32.ஓம் க்லீம் ஓம் அஷ்ட கர ஸ்வரூபாயை நம்: 33.ஓம் க்லீம் ஓம் அஷ்டமா சித்திதராய நம: 34.ஓம் க்லீம் ஓம் அஷ்டாட்சர ப்ரியாயை நம: 35.ஓம் க்லீம் ஓம் நவவீர பூஜிதாய நம: 36.ஓம் க்லீம் ஓம் நவக்ரஹ ப்ரியாயை நம: 37.ஒம் க்லீம் ஒம் நவமாதா சேவிதாய நம: 38.ஓம் க்லீம் ஓம் நவபாஷாண மூலாய நம: 39.ஓம் க்லீம் ஓம் நவலோக மூல புருஷாய நம: 40.ஓம் க்லீம் ஓம் நவநாத சித்தப் ப்ரியாய நம: 41.ஓம் க்லீம் ஓம் பர்வத சேவிதாய நம: 42.ஓம் க்லீம் ஓம் பாச மூலாய நம: 43.ஓம் க்லீம் ஓம் வித்யா ஞானாய நம: 44.ஓம் க்லீம் ஓம் கந்தர்வ சேவிதாய நம: 45.ஓம் க்லீம் ஓம் தேவப் ப்ரியாயை நம: 46.ஓம் க்லீம் ஓம் ருத்ராதிபதிப் ப்ரியாயை நம: 47.ஓம் க்லீம் ஓம் பிதுர் தேவ பூஜிதாய நம: 48.ஓம் க்லீம் ஓம் பரிசுத்த அக்னி வீரபத்ராயை நம: 49.ஓம் க்லீம் ஓம் ஆத்ம காரகாயை நம: 50.ஓம் க்லீம் ஓம் ஆபத் சகாயை நம: 51.ஓம் க்லீம் ஓம் ஆதி வீர அக்னி பூரண வீரபத்ர பரப்ப்ரம்மனே நம: ஸ்ரீ வீரபத்ரர் காயத்ரி மந்திரம் "ஓம் தத்புருஷாய வித்மஹே ஜனசம்ரக்ஷக தேவாய தீமஹி தண்நோவீரபத்ரப்ரசோதயாத்" நன்றி - ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் கிரிவலம் சாலை ,ஆடையூர் ,திருஅண்ணாமலை