Thursday 28 February 2013

கருட பிரம்ம வித்யை

கிரந்தி மங்கேப்ய; கிரண நிகுரும்பா அம்ருதரஸம்
ஹ்ருதி த்வாமாதத்தே ஹிமகரசிலா மார்த்தி மிவய
ஸஸர்ப்பாணாம் தர்ப்பம் சமயதி சகுந்தாதிப இவ
ஜ்வர பிருஷ்டாத் திருஷ்டய ஸுகயதி ஸுதாதாரசிரயா'
சௌந்தர்ய லஹரியில் இருபதாவது ஸ்லோகம் இது. அம்பாளின் ஒளிமயமான சரீரத்தில் இருந்து ஏராளமான ஒளிக் கற்றைகள் வீசுகின்றன.அவற்றில் இருந்து அம்ருதரஸம் பெருகுகிறது. இந்த பாவனையில் அம்பாளை தியானித்து இந்த ஸ்லோகத்தை 108 முறை தினமும் ஆறுமாத காலம் ஜெபித்து வருபவன் கருடனுக்கு ஒப்பானவன் ஆகிறான். இவன் கையால் ஒரு துளி மண்ணை அல்லது சாம்பலை அள்ளிக் கொடுத்தாலும் விஷபயம் நீங்கும்.தீராத நோய்கள் பஞ்சாய் பறக்கும்.
இத்தனை சிறப்பு வாய்ந்ந கருடனைப் பற்றி சில வரிகள். தங்க இறக்கைகள் கொண்ட கருத்மானாக அவரே(கடவுள்) இருக்கிறார் என்கிறது ரிக்வேதம். கருடனை மூன்றாகச் சொல்லலாம். ஆதிபௌதிக கருடன், ஆதிதைவீக கருடன், ஆத்யாத்மிக கருடன் என்று. உலகில் காணப்படுவது ஆதி பௌதிக கருடன். தெய்வமாக பாவித்து தியானம் செய்வது ஆதிதைவீகருடன். விஷக்கடியை இறக்கும் போது மந்திரம் சொல்லும் போது தானே கருடன் என்ற 'கருடோஹம்' பாவனையில் தம்மைத்தாமே கருடனாக நினைப்பது ஆத்யாத்மிக கருடன். முற்காலங்களில் தேசாந்திரம் செல்பவர்கள், துறவிகள் கருட பஞ்சாக்ஷரி கூறி தம் தண்டத்தால் தாம் படுக்கும் இடம் சுற்றி கோடு வரைந்து பாம்புகள் அண்டாமல் காத்துக் கொள்வார்கள். ஆஞ்சநேயர் சிறிய திருவடி. கருடன் பெரிய திருவடி.
கருட் என்றால் சிறகு என்று பொருள்படும். பஞ்ச பட்சி சாஸத்திரத்தில் கருடன் பருந்து இனத்தைச் சேர்ந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. இவை வஸந்த ருதுவில் காதல் செய்யும். ஆண் பறவையால் பெண் பறவையை எளிதில் வசப்படுத்த முடியாது. வானத்தில் வட்டமிட்டு பல வகையில் தன் பலத்தை நிரூபித்து பென்பறவையை வசப்படுத்தும். இணை சேர்ந்த அணும் பெண்ணும் சாகும் வரை வேறு ஒன்றின் துணை நாடாமல் கற்பு நெறி காக்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இணை சேர்ந்து முட்டையிடும். தாய்ப் பறவைதான் தன் குஞ்சுகளை முதுகில் ஏற்றிக் கொண்டுபோய் வானத்தில் பறக்கக்கற்றுக் கொடுக்கும். சில விஷயங்களைப் படிக்கும் போது மனிதனை விட பறவைகள் விலங்குகள் எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது.கொலம்பஸ் திசை தெரியாமல் கடலில் தவித்த போது கருடனை வேண்ட, அவர் வானில் பறந்து வந்து மேற்கு திசை நோக்கி அழைத்துச் சென்றதாக கதை சொல்வார்கள். மாவீரன் நெப்போலியன் கருடக் கொடியையே கொண்டிருந்தார். ஞாயிறு அன்று கருடனை தரிசித்தால் வியாதி நீங்கும், திங்கள் - குடும்ப நலன், செவ்வாய் - தைரியம் ஏற்படும், புதன் - எதிரிகள் மடிவர், வியாழன் - ஆயுள் தீர்க்கம், வெள்ளி - அஷ்ட ஐஸ்வர்யம் கிட்டும், சனி - இறந்த பின் மோட்சம். உயர்ந்த கோபுரங்கள், மரங்கள், மலை முகடுகளில் வசிக்கும்.
ஆதி காலங்களில் ஞானிகளும், துறவிகளும் விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், பிறர்க்கு உதவும் பொருட்டும் கருடோஹம் என்ற பாவனையில் கோடிக்கணக்கில் ஜெபித்து சித்தி ஆடைந்து வைத்திருந்தார்கள். அதற்கான சிறந்த மந்திரம் கருடப்பிரம்ம வித்யா எனப்படும் கருட பஞ்சாக்ஷரி ஆகும். அதன் மூலமந்திரம்,
' ஓம் க்ஷிப ஸ்வாஹா '
ராம என்பது மரா என்று ஜெபிக்கப்பட்டதைப் போல பக்ஷி என்பது க்ஷிப என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மந்திரத்தின் விரிவு இதோ,
''ஓம் ஈம் த்வத்காரீம் மத்காரீம்
விஷ தூஷினீம் விஷ நாசினீம்
ஹதம் விஷம் நஷ்டம் விஷம்
ஹதம் இந்த்ரஸ்ய விஷம்
ஹதம் இந்த்ரஸ்ய வஜ்ரேண விஷம்
ஹதம் தே ப்ருஹ்மணா விஷம் - ஓம்
க்ஷிப ஸ்வாஹா''
ஈம் என்பது காமகலாபீஜம் கருடனை ஆகர்ஸத்து இழுக்க வல்லது.
மேலும் ஒரு சிறப்பான மந்திரம் பின் வருமாறு,
''ஓம் நமோ பகவதே கருடாய, காலாக்னி வர்ணாய
ஏஹி ஏஹி, காலாநல லோலில் ஜிஹ்வாய
பாதய பாதய, மோஹய மோஹய
வித்ராவய வித்ராவய, ப்ரம ப்ரம, ப்ரமய ப்ரமய
ஹந ஹந, தஹ தஹ, பத பத, ஹூம்பட் ஸவாஹா''
அடுத்து கருட காயத்ரி. '' ஓம் தத் புருஷாய வித்மஹே
சுவர்ண பக்ஷாய தீமஹி
தன்னோ கருடப் ப்ரசோதயாத்'' என்பதாம்.
மேற்கண்ட அனைத்து மந்திரங்களிலும் சிறந்ததாகவும், எளியதாகவும் கருதப்படுவது. கருட பிரம்ம வித்யை ஆகிய கருட பஞ்சாக்ஷரியே ஆகும். ராகு கேது தோஷமுள்ளவர்கள் கருட பிரம்ம வித்யையை ஹோமம் செய்து நலம் பெறலாம். வியாயக் கியமை அதுவுமாக நண்பர்கள் அனைவரும் கருடனை தரிசித்து நீண்ட ஆயுளும், நோயற்ற வாழ்வும், எல்லா நலங்களும் பெற்று வாழ்வீர்களாக

Tuesday 26 February 2013

பவானி அஷ்டகம்

பவானி அஷ்டகம்
(ஆதி சங்கரர் எழுதிய பவாநியாஷ்டகத்தின் தழுவல் )

(1)ந தாதோ ந மாதா ந பந்துர் ந தாதா
ந புத்ரோ ந புத்ரீ ந ப்ருத்யோ ந பர்தா
ந ஜாயா ந வித்யா ந வ்ருத்திர் மமைவ
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி 


பெற்றோரோ,உற்றாரோ,மணங்கொண்ட துணையோ,
நான் பெற்ற மக்களோ,பணமோ ,என் அறிவோ,
என்னைக் கடைதேற்றவல்ல துணையல்ல;
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !

(2)பவாப்தாவபாரே மஹா துக்க பீரு
பபாத ப்ரகாமீ ப்ரலோபீ ப்ரமத்த:
குஸம்ஸார பாஸ ப்ரபத்த: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி


தத்தளிக்கின்றேன் நான் பிறவிக்கடலில் ;
தாழ்வடைந்தேன் காமம், பேராசையாலே;
சிக்கித்தவிக்கின்றேன் சம்சார வலையில்;
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !

(3)ந ஜானாமி தானம் ந ச த்யானயோகம்
ந ஜானாமி தந்த்ரம் ந ச ஸ்தோத்ரமந்த்ரம்
ந ஜானாமி பூஜாம் ந ச ந்யாஸயோகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!
ஈயுமின்பம்,த்யானநிலையொன்றுமறியேன்;
தந்திரமோ,தோத்திர மந்திரமோ அறியேன்;
பூஜைவிதி,துறவுநிலை ஏதுமறியேன் ;
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !

(4)ந ஜானாமி புண்யம் ந ஜானாமி தீர்த்தம்
ந ஜானாமி முக்திம் லயம் வா கதாசித்
ந ஜானாமி பக்திம் வ்ருதம் வாபி மாத
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் தவமேகா பவானி!


புண்ணியமோ ,புனிதத்தலமோ நான் அறியேன்;
உன்னோடுளம் ஒன்றும்வழி,முக்திநெறி அறியேன்;
பக்திசெய்தலும் ,விரதவிதி ஏதும் அறியேன்;
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !

(5)குகர்மீ குசங்கீ குபுத்தி குதாச:
குலாசாரஹீன: கதாசாரலீன:
குத்ருஷ்டி: குவாக்ய ப்ரபந்த: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!


தீயன என் எண்ணங்கள்,செயல்,சேர்க்கை யாவும்;
குல நெறி காத்திலேன்;நடத்தையிலும் கடையன்;
நோக்கு,வாக்கனைத்திலும் நானென்றும் தீயன்;
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !


(6)ப்ரஜேஷம் ரமேஷம் மஹேஷம் சுரேஷம்
தினேஷம் நிசிதேஸ்வரம் வா கதாசித்
ந ஜானாமி சான்யத் சதாஹம் சரண்யே
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!


ஆக்கும் அயன்,காக்கும் அரி,அரன்,அமரர்தலைவன்,
இரவி,சந்திரன் எந்த தெய்வமும் நான் அறியேன்;
உன் பதங்களன்றி அரண் வேறு அறியேன்;
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !

(7)விவாதே விஷாதே ப்ரமாதே ப்ரவாசே
ஜலே ச அனலே பர்வதே சத்ரு மத்யே
அரண்யே சரண்யே சதா மாம் ப்ரபாஹி
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

சர்ச்சையிலும்,துக்கம்,மதிமயக்கந்தனிலும்,
நெடும்பயணம்,நீர்,நெருப்பு,மலை,காடு எதிலும்,
சூழ்பகையிலும் என்றும் எனக்கபயம் நீயே!
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !

(8)அநாதோ தரித்ரோ ஜரா ரோக யுக்தோ
மஹா க்ஷீண தீன: சதா ஜாட்யவக்த்ர:
விபத்தௌ ப்ரவிஷ்ட: ப்ரணஷ்ட: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

நாதியற்ற ஏழை,மூப்பால் நோயாளியானேன்;
வலுவற்று சோர்ந்தேன்;இழி நிலையடைந்தேன்;
வினை சூழ்ந்த எனை என்றுங்காக்குந் துணை நீ!
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !

Sunday 24 February 2013

LIBERATED SOULS' MOVE

பகைஎன்னும் பண்பு இலதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
- (குறள் : 871)
பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிரித்துப் பொழுதுபோக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.




 ஸுதா தாரா சாரை:சரணயுகளாந்தர் விகலிதை :
ப்ரபஞ்சம் சிஞ்சதி புநரபி ரஸாம்னாய மஹஸ:
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப மத்யுஷ்ட வலயம் 
ஸ்வாமாத்மாநம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணீம்.